உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மக்கள் தொடர்பு முகாம்

மக்கள் தொடர்பு முகாம்

திருமங்கலம்: திருமங்கலம் மேலக்கோட்டையில் கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. டி.ஆர்.ஓ., அன்பழகன், உதவி கலெக்டர் சித்தார்த் போகர்ணா முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் 145 பயனாளர்களுக்கு ரூ. 53 லட்சத்து 6 ஆயிரத்து 621 மதிப்பிலான நலத்திட்டங்களை கலெக்டர் வழங்கினார். மேலும் மேலக்கோட்டை அரசுப் பள்ளியில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு கேடயங்கள் வழங்கி பாராட்டினார். பல்வேறு துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்கள் குறித்த விளக்க காட்சி காட்சி அரங்குகளை பார்வையிட்டார். மாவட்ட பொது வினியோகத்துறை சார்பில் 50 பயனாளிகளுக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டன. ஆர்.டி.ஓ., சிவஜோதி, தாசில்தார் முத்துலட்சுமி, உதவி கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பொன்ராஜ், டி.எஸ்.ஓ., ராஜகுரு உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை