உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வருவாய் அலுவலர் ஆர்ப்பாட்டம்

வருவாய் அலுவலர் ஆர்ப்பாட்டம்

மதுரை : மதுரையில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் முறையீடாக ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கோபி தலைமை வகித்தார். மாநில தலைவர் முருகையன், மாவட்ட செயலாளர் முகைதீன் அப்துல்காதர் உட்பட பலர் பங்கேற்றனர்.தாசில்தார், துணைத்தாசில்தார் நிலையில் கலந்தாய்வு முறையில் பணிமாறுதல் செய்திடும் நடைமுறை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. இதனால் அம்முறையை மாற்றாமல் கலந்தாய்வு பணியிட மாற்றத்தை செய்ய வேண்டும். அனைத்து நிலை அலுவலர்களின் பதவி உயர்வு பட்டியல்கள் வெளியிடப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதனை மனுவாக கலெக்டரிடம் வழங்கியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை