மேலும் செய்திகள்
பள்ளி, கல்லுாரி செய்திகள்...
15-Feb-2025
மதுரை: விவேகானந்த கல்லுாரி பொருளியல் துறை, சென்னை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் உலக காச நோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் வெங்கடேசன் தலைமை வகித்தார். பொருளியல் துறைத் தலைவர் சதீஷ் பாபு வரவேற்றார். கட்டுரை சமர்ப்பித்தல், ஓவியம் வரைதல், ரங்கோலி போட்டிகள் நடந்தன. சாம்பியன் பட்டத்தை லேடி டோக் கல்லுாரி வென்றது. செயலாளர் சுவாமி வேதானந்த, சுவாமி அத்யாத்மானந்த, துணை முதல்வர் கார்த்திகேயன், உதவிப் பேராசிரியர்கள் தினகரன், அசோக்குமார், சாமிநாதன் பங்கேற்றனர். பேராசிரியர் அருள்மாறன் நன்றி கூறினார். கல்லுாரியில் 'பேஷன் டாஸில்'
மதுரை: சேர்மத்தாய் வாசன் கல்லுாரியில் பேஷன் டெக்னாலஜி துறை சார்பில் பேஷன் டாஸில் நிகழ்ச்சி நடந்தது. துறைத் தலைவர் சித்ரா வரவேற்றார். போட்டிகள் நடந்தன. வணிகவியல் துறை மாணவி ஷாலினி 'மிஸ் எஸ்.வி.சி.,'யாக தேர்வானார். சிறப்பு விருந்தினராக ட்ரீம் பேஷன் நிர்வாக இயக்குனர் தங்க ராஜேஸ்வரி, சனா பிரைடல் நிறுவனர் வி.எம். கவிதா, துணைத் தலைவர் குழந்தை வேலு, இணைச் செயலாளர் பாலகுரு, முதல்வர் எம்.கவிதா பங்கேற்றனர். பயிற்சி முகாம்
மதுரை: மதுரை பாத்திமா கல்லுாரியில் 2025 - 2026 கல்வியாண்டுக்கான மாணவ பேரவை தேர்தலில் போட்டியிட தேர்வு செய்த மாணவியருக்கு தலைமைத்துவ பயிற்சி, கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தன.முதல்வர் செலின் சகாய மேரி தலைமை வகித்தார். மாணவ பேரவை தலைவி ரிஸ்வானா வரவேற்றார். சிறப்பு விருந்தினர் நிகோலஸ் பிரான்சிஸ், தலைமைப் பொறுப்பின் முக்கியத்துவம் குறித்தும், சிறந்த தலைமைக்கான தகுதிகளை வளர்த்துக்கொள்வது குறித்தும் பேசினார். ஒருங்கிணைப்பாளர்கள் சோபியா, பொன்னி, ரூபிலீலா ஏற்பாடு செய்தனர். மாணவ பேரவை தலைவி பவிலா ஜோஸ் நன்றி கூறினார்.* பாத்திமா கல்லுாரியில் பொருளாதாரத்துறை சார்பில் கல்லுாரிகளுக்கு இடையிலான போட்டி நடந்தது. பொருளாதாரத் துறை தலைவர் ரெஜினா மேரி வரவேற்றார். மதுரை, திருச்சி, சிவகங்கை, விருதுநகர் கல்லுாரிகளில் இருந்து மாணவர்கள் பங்கேற்றனர். கல்லுாரி செயலாளர் இக்னேஷியஸ் மேரி, திருச்சி ஹோலி கிராஸ் கல்லுாரி பொருளாதார துறை பேராசிரியை யசோதா முருகேஸ்வரி பங்கேற்றனர்.
15-Feb-2025