உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பள்ளி, கல்லுாரி செய்திகள்

பள்ளி, கல்லுாரி செய்திகள்

கருத்தரங்கம் மதுரை: தியாகராஜர் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட் கல்லுாரியில் மிட்டாய் தயாரிக்கும் நிறுவனத்தின் கேண்டி தொழிற்சாலை சார்பில் தொழில்முனைவோர் கருத்தரங்கம் நடந்தது. டி.எஸ்.எம். இயக்குனர் முரளி சாம்பசிவன் தலைமை வகித்து பேசுகையில், 'ஸ்டார்ட்அப் டி.என்., மிஷன் டைரக்டர் தலைமை நிர்வாக அதிகாரி சிவராஜா ராமநாதன் டி.எஸ்.எம். தொழில்முனைவோர் வளர்ச்சி மையத்தை சமீபத்தில் தொடங்கினார். இதன் முக்கிய நோக்கம் இன்றைய போட்டிகாலத்தில் புதுமை, நிலையான வணிக நடைமுறைகளின் முக்கியத்துவத்தை கருதி தொடங்கபட்டுள்ளது. இதன் மூலம் தொழில்முனைவோர், புதுமைகளை வளர்ப்பதற்கான உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது'' என்றார். கேண்டி நிறுவனர்கள் மகேஷ், அனுஷா பங்கேற்றனர். டி.எஸ்.எம்.,தொழில்முனைவோர் பிரிவு சார்பில் ஏற்பாடுகளை செய்தனர்.தேசிய அறிவியல் தினம்திருப்பரங்குன்றம்: சவுராஷ்டிரா கல்லுாரி வேதியியல் துறை சார்பில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது. செயலாளர் குமரேஷ் தலைமை வகித்தார். நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தார். துறைத் தலைவர் சத்தியேந்திரன் வரவேற்றார். முதல்வர் ஸ்ரீநிவாசன் துவக்க உரையாற்றினார். அமெரிக்கன் கல்லுாரி விலங்கியல் துறை உதவி பேராசிரியர் ராஜேஷ் பேசினார். பேராசிரியர்கள் ராஜசேகரன், கிருஷ்ணன், மணிகண்டன் ஒருங்கிணைத்தனர். நுாற்றாண்டு விழாமேலுார்: பதினெட்டாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நுாற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. எம்.எல்.ஏ.,பெரியபுள்ளான், ஜெ., பேரவை செயலாளர் தமிழரசன் தலைமை வகித்தனர். முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் பொன்னுச்சாமி முன்னிலை வகித்தார். கல்வி விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு எம்.எல்.ஏ., பரிசு வழங்கினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. வட்டார கல்வி அலுவலர்கள் அழகுமீனாள், ஜெயசித்ரா, பள்ளி மேலாண்மை குழுத் தலைவி கார்த்திகா, தலைமை ஆசிரியர் மலர்விழி, ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.பயிற்சி பட்டறைமதுரை: காமராஜ் பல்கலையில் அறிவுசார் சொத்துரிமை பிரிவு, மாநில அறிவியல் தொழில்நுட்ப கழகம் சார்பில் 'அறிவுசார் சொத்துரிமை தாக்கல், தொழில்நுட்ப பரிமாற்றம் வணிகமயமாக்கல்' என்ற தலைப்பில் பயிற்சி பட்டறை நடந்தது. சொத்துரிமை பிரிவுத் தலைமை அதிகாரி வரலட்சுமி வரவேற்றார். பதிவாளர் ராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார். கன்வீனர் குழு உறுப்பினர் மயில்வாகனன் தலைமை வகித்தார். சொத்துரிமை தாக்கல், பரிமாற்றம் குறித்து சென்னை காப்புரிமை அலுவலக வடிவமைப்பு துணை கட்டுப்பாட்டாளர் ராஜா பேசினார். உயிரித்தொழில்நுட்ப புலத் தலைவர் கணேஷ்,காப்புரிமை அலுவலக உதவி பதிவாளர் சிவக்குமார், மதுரை எம்.எஸ்.எம்.இ., உதவி இயக்குநர் ஜெயசெல்வம் பங்கேற்றனர். சொத்துரிமை பிரிவு உறுப்பினர் ராஜேஷ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை