பெருந்துயர் நினைவு தினம் மதுரை: ஆகஸ்ட் 14ம் தேதி தேசப் பிரிவினை பெருந்துயர் நினைவு தினமாக அனுசரிக்கப்படுகின்றன. இதை முன்னிட்டு வெள்ளைச்சாமி நாடார் பி.எட்., கல்லுாரி, காந்தி மியூசியத்தின் காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் தேன்மொழி தலைமை வகித்தார். ஆராய்ச்சி நிறுவன முதல்வர் தேவதாஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தேசப்பிரிவினையை எதிர்த்தவர் காந்தி எனும் தலைப்பில் பேசினார். காந்திய சிந்தனை சான்றிதழ், பட்டய தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.கருத்தரங்குதிருப்பரங்குன்றம்: மதுரை சவுராஷ்டிரா கல்லுாரி நுண்ணுயிரியல் துறை சார்பில் பல்லுயிர் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு நடந்தது. செயலாளர் குமரேஷ் தலைமை வகித்தார். நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரன், முதல்வர் சீனிவாசன் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் ரேகா வரவேற்றார். மதுரைக் கல்லுாரி தாவரவியல் துறை பேராசிரியர் சரவணன் பேசினார். ஐ.க்யூ.ஏ.சி. ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார், டீன் கவிதா, பேராசிரியர்கள் சதீஷ்முருகன், அஞ்சனபிரியா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். பேராசிரியர் செல்வி நன்றி கூறினார்.இலவச சீருடை வழங்கல் திருப்பரங்குன்றம்: இந்திராகாந்தி நினைவு ஆரம்பப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கும் விழா நடந்தது. தலைமை ஆசிரியர் குப்புமணி தலைமை வகித்தார். ஆசிரியர்கள் கலா, சண்முகசுந்தரி, மகேஸ்வரி கவிதா, வினோத்குமார், சாந்தி பங்கேற்றனர். பெற்றோர் இல்லாதவர்கள், தாய் அல்லது தந்தை மட்டும் உள்ள 65 மாணவர்களுக்கு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் சண்முகசுந்தரம் சொந்த செலவில் சீருடைகள் வழங்கினார்.ரத்த தான முகாம்மதுரை: பாத்திமா கல்லுாரியில் என்.எஸ்.எஸ்., திட்டம், அரசு மருத்துவமனை சார்பில் ரத்த தான முகாம் நடந்தது. மாணவி சாய் தீபிகா வரவேற்றார். முதல்வர் செலின் சகாய மேரி முகாமை துவக்கி வைத்தார். ரத்த தானம் செய்வதன் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினார். 150 பேர் ரத்ததானம் செய்தனர். ஏற்பாடுகளை டாக்டர்கள் வினோஷா, லதா மகேஷ்வரி, ரேணுகா, பிரியா, செல்வி உள்ளிட்டோர் செய்தனர்.கருத்தரங்கு மதுரை: செந்தமிழ்க் கல்லுாரியில் நான்காம் தமிழ்ச்சங்கம், பைந்தமிழ் இலக்கியப் பேரவை சார்பில் ஆய்வு நெறிமுறை கருத்தரங்கு நடந்தது. சங்கச் செயலாளர் மாரியப்பமுரளி தலைமை வகித்தார். உதவிப் பேராசிரியர் இந்துராணி வரவேற்றார். திருப்பத்துார் ஆறுமுகம் பிள்ளை சீதை அம்மாள் கல்லுாரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் கந்தசாமி பாண்டியன் ஆய்வும் நாமும் என்ற தலைப்பிலும், விருதுநகர் வே.வ.வன்னிய பெருமாள் மகளிர் கல்லுாரி தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் விந்திய கவுரி ஆய்வு அணுகுமுறைகள் என்ற தலைப்பிலும் பேசினர். உதவிப் பேராசிரியர் நேருஜி நன்றி கூறினார். புரட்சிப் பாவலர் மன்றத் தலைவர் வரதராஜன், கல்லுாரி முதல்வர் சாந்தி தேவி, பேராசிரியர் சதாசிவனார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.