குழாய் உடைந்து பாய்ந்த கழிவுநீர்
அவனியாபுரம்: மதுரை பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் குழாய்கள் மூலம் வெள்ளக்கல்லில் உள்ள மாநகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு சுத்திகரிக்கப்படும். அவனியாபுரம்-கல்குளம் சாலை பகுதியில் உள்ள குழாயில் நேற்று உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் ரோட்டில் பாய்ந்தது. இதனால் அப்பகுதியில் டூவீலரில் சென்றோர் அவதிப்பட்டனர். மாநகராட்சி பொறியாளர்கள், பணியாளர்கள் குழாய் உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.