உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தாயை கண்டுபிடிக்க ராணுவவீரர் மனு

தாயை கண்டுபிடிக்க ராணுவவீரர் மனு

மதுரை: மதுரையில் மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் சங்கீதா தலைமையில் நடந்தது. இதில் டி.ஆர்.ஓ., ராகவேந்திரன், நேர்முக உதவியாளர் சந்திரசேகரன் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.பேரையூர் அருகே சலுப்பப்பட்டியைச் சேர்ந்தவர் முத்து. இவர் உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்திய - நேபாள எல்லைப் பகுதியில் துணை ராணுவப்படையில் பணியாற்றுகிறார். சீருடையுடன் வந்த அவர் அளித்த மனு: எனது அம்மா வெள்ளைத்தாய். கடந்த ஜன. 8ல் ஒரு குழுவில் இணைந்து திருப்பதிக்கு சென்றார். ஜன. 10 அன்று குழுவை விட்டு பிரிந்து காணாமல் போய்விட்டார். இதுதொடர்பாக எப்.ஐ.ஆர்., பதிவு செய்து அங்குஉள்ள எஸ்.பி., அலுவலகத்தில் மனு கொடுத்தேன். முதல்வருக்கும் மனு அனுப்பினேன். ஒரு மாதத்திற்கும் மேலாக அவரை கண்டுபிடிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கலெக்டர்தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.சமூகஆர்வலர்கள் பெரியகருப்பன், ராஜ்குமார்அளித்த மனுவில், ''தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் ஏழை மாணவர்களும் பயன்பெறும் வகையில், மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையான மும்மொழி கல்வி முறையை அமல்படுத்த வேண்டும். இதனால் அவர்கள் வாழ்க்கைத்தரம் மேம்படும்'' என தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ