உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போதைப்பொருள் தடுப்பு தென்மண்டலம் சிறப்பு டி.ஜி.பி., பாராட்டு

போதைப்பொருள் தடுப்பு தென்மண்டலம் சிறப்பு டி.ஜி.பி., பாராட்டு

மதுரை : ''போதைப்பொருள் குற்றத்தடுப்பு வழக்குகளில் தென்மண்டலம் சிறப்பாக பணியாற்றியுள்ளது. இன்னும் சிறப்பாக பணியாற்ற வேண்டும்'' என டி.ஜி.பி., சங்கர்ஜிவால் பாராட்டினார்.மதுரையில் நேற்று நடந்த ஆய்வுக்கூட்டத்தில் இளம் டி.எஸ்.பி.,க்களுக்கு அறிவுரை வழங்கி டி.ஜி.பி., சங்கர்ஜிவால் பேசியதாவது: பொதுவாக சட்டம் ஒழுங்கு குறித்து ஐ.ஜி., -எஸ்.பி., போன்றவர்கள் தான் ஆய்வு நடத்துவோம். தற்போது ஏ.டி.எஸ்.பி.,- டி.எஸ்.பி., அதிகாரிகளுடனான ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளோம். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தீவிரமாக புலனாய்வு செய்ய வேண்டும். புகார்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். போதைப்பொருள் குற்றத்தடுப்பு வழக்குகளில் தென்மண்டலம் சிறப்பாக பணியாற்றியுள்ளது. இன்னும் சிறப்பாக பணியாற்ற வேண்டும்.தற்போது சைபர் கிரைம் அதிகரித்து வருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன் ஒரு வழக்குதான் பதிவாகும். தற்போது 100 வழக்குகள் பதிவாகின்றன. அது தொடர்பான புகார், வழக்குகளை எப்படி கையாள்வது என்பது குறித்து உரிய வழிகாட்டுதல் தரப்பட்டுள்ளது. போலீஸ் துறையில் போலீசார் நலன் குறித்து கூடுதல் கவனம் செலுத்த உள்ளோம். 26 கருத்துக்கள் அடிப்படையில் கிரேடு 1 முதல் எஸ்.எஸ்.ஐ., வரை அவர்களுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.தென்மண்டல ஐ.ஜி., பிரேம்ஆனந்த் சின்ஹா, கமிஷனர் லோகநாதன், எஸ்.பி.,க்கள் அரவிந்த், கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ