உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாநில நல்லாசிரியர் விருது நேர்காணல் 35 பேர் பங்கேற்பு; குறையும் ஆர்வம்

மாநில நல்லாசிரியர் விருது நேர்காணல் 35 பேர் பங்கேற்பு; குறையும் ஆர்வம்

மதுரை : மதுரையில் மாநில நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு சி.இ.ஓ., கார்த்திகா தலைமையில் நேற்று நேர்காணல் நடந்தது.மாவட்டத்தில் 35 பேர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கு சி.இ.ஓ., தலைமையில் 8 பேர் கொண்ட குழு நேர்காணல் நடத்தியது. அனுபவம், கற்றல் கற்பித்தலில் சாதனைகள், மாணவர்கள், பள்ளிக்கு பயன்படும் செயல்பாடுகள் உள்ளிட்ட தகுதிகளுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் 26 பேர் இறுதி செய்யப்பட்டு இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

குறைந்து வரும் ஆர்வம்

இந்தாண்டு 35 பேர் மட்டுமே விண்ணப்பித்த நிலையில் மாநில அளவில் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கும் ஆர்வம் ஆசிரியர்களிடையே குறைந்து வருவதாக சர்ச்சை எழுந்துள்ளது.ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: விருது பெற அரசியல், அதிகாரிகள் சிபாரிசு தேவை என்ற எண்ணம் ஆசிரியர்களிடையே மேலோங்கியுள்ளது. விருது பட்டியலில் விண்ணப்பிக்காதவர் பெயர் கூட வெளியாகிய குற்றச்சாட்டும் உள்ளது. இதை தாண்டி தகுதி, அனுபவம் அடிப்படையில் சிலருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கிறது. இதனால் தகுதியுள்ள ஆசிரியர்கள் பலர் ஆர்வம் காட்டுவதில்லை. இந்தாண்டு 'எமிஸ்' மூலம் விண்ணப்பித்த நடைமுறை பாராட்டத்தக்கது. விருது பெறுவதற்கான ஆசிரியர்களின் ஆர்வத்தை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Noor Jahan
செப் 02, 2024 18:11

நான் நல்லாசிரியர் விருதுக்கு பதிவு செய்திருந்தேன் அதன் படி நேர்காணலிலும கலந்து கொண்டேன் முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்ட குழு சீரிய முறையில் நடத்தினார்கள் ஒவ்வொருவரும் வரிசைபடி அழைக்கப்பட்டு எங்களை பற்றிய விவரங்கள் கேட்டறிந்தார்கள் மனதிற்கு மகிழாச்சியாக இருந்தது எந்த அரசியல் தலையீடு ஏதும் இல்லை நேர்மையாக மாணவர்களுக்காக உழைத்து ஆசிரியப் பணி செய்திருந்தேன் அவர்கள் எதிர்பார்த்த அத்துனை செயல்பாடுகளும் என்னிடம் இருந்தது . அரசுப் பணி என்பது ஒரு அறபபணி நாம் தான் மாணவனை வடிவமைக்கிறோம் அதை நம்பித்தான் ஒவ்வொரு பெற்றோரும் நம்மிடம் குழந்தையை ஒப்படைக்கிறார்கள் ஏன் என் குழந்தையும் இன்னொரு ஆசிரியரால் ஏற்றப்பட்டதுதானே எனவே கற்றல்மட்டுமல்ல அவன் திறமை கண்டறிதல் இடைநிற்றல் இல்லாமல் பள்ளி வருதல் இதில் கவனமாக செயல்பட வேண்டும் ஏனெனில் கிராமங்களில் விவசாய வேலை 100நாள் வேலையென பெற்றோர் செல்லும் போது அவன் பள்ளிக்கு செல்லவில்லை என்பது நாம் சொன்னால்தான் தெரியும் அதில் ஆசிரியர் கவனம் செலுத்த வேண்டும் அதிக விடுப்பு எடுக்கும் போது பாடங்கள் விடுபட்டு அவனுக்கு சுமையாக மாறிவிடும் அதையும் தாண்டி பத்தாம் வகுப்பு தேர்வில் ஒரிரு பாடம் தவறிவிட்டால் பெற்றோரும் அவனும் போதும் படித்தது கூலி வேலைக்கு செல்லலாம் என்கிற முடிவுக்கு வந்து விடுவார் கள் இதனால் கற்றோர் சதவீதம் குறையும் இதனால்தான் அவனை அழைத்து விடுப்பிற்க்கான காரணம் அறிந்து அவனை திருத்தி விட்டால் நிச்சயம் தொடர்ந்து பள்ளிக்கு வந்து தேர்வில் வெற்றி பெறுவான் அதன் பின் அவன் பயணம் தடைபடாது பட்டதாரி வரை சர்வ சாதாரணமாக பயணப்படுவான் எனவே எந்த மாணவனும் பள்ளி வராமல் இடைநிற்றல் இருந்தால் ஆசிரியர் பள்ளி வகுப்பறை மட்டும் இன்றி அவனை தேடிச்சென்று அழைத்து வந்து அவனை உயர்த்துவது தான் நம் கடமையில் ஒன்று அதற்கும் அவன் ஒத்துவரவில்லை எனில் அனைவருக்கும் கல்வி மாணவர் உதவி மையம் தொடர்பு கொண்டு எப்படியும் கல்வி பெறச்செய்தல் ஆசிரியரின் தலையாய கடமை என்பதை இங்கு பகிர்கிறேன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை