உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பஸ் வசதி இன்றி மாணவர் தவிப்பு

பஸ் வசதி இன்றி மாணவர் தவிப்பு

பேரையூர்: பாப்பையாபுரம், ராமநாதபுரம், பாப்பிரெட்டிப்பட்டி, சிலைமலைப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஏராளமாான மாணவர்கள் பேரையூரில் படிக்கின்றனர். இவர்கள் மாலையில் வீடு திரும்புவதற்கு மட்டும் பஸ் வசதி உள்ளது. காலையில் பள்ளி செல்வதற்கு பஸ் வசதி இல்லை. விருதுநகரில் இருந்து பேரையூருக்கு சுப்புலாபுரம் வழியாக காலை 6 மணிக்கும் 10 மணிக்கும் அரசு பஸ் வருகிறது. பள்ளிக்கு செல்லும் நேரத்தில் பஸ் இல்லாததால் காலையில் 5 கி.மீ., நடந்து சென்று மாலையில் பஸ்சில் வரும் நிலை உள்ளது. இதனால் மாணவிகள் படிப்பை நிறுத்தும் நிலை உருவாகிறது. மாணவர்கள், பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு காலையில் பள்ளி நேரத்தில் இந்த வழித்தடத்தில் அரசு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !