தாலுகா அலுவலகம் முற்றுகை
திருமங்கலம்: திருமங்கலம் அருகே சின்னஉலகாணியைச் சேர்ந்தவர் பால்பாண்டி 40. ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்தால் இருமடங்கு லாபம் தருவதாக கூறி உறவினர்கள், தெரிந்தவர்களிடம் ரூ.பல கோடி முதலீடு பெற்று அதில் வந்த லாபத்தினை ஆரம்பத்தில் பிரித்து கொடுத்துள்ளார். பின்னர் காசோலை வழங்கி மோசடி செய்தார். இந்நிலையில் ஓராண்டுக்கு முன்பு ராணுவ வீரர் தர்மலிங்கம் மீது வேன் ஏற்றி கொலை செய்துவிட்டு விபத்து என நாடகமாடிய வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார். மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் நேற்று 100க்கும் மேற்பட்டவர்கள் திருமங்கலம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர்.