உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பொய் சொல்லும் முதல்வருக்கு பிஎச்.டி., பட்டம் வழங்கலாம்; மதுரையில் தமிழிசை கிண்டல்

பொய் சொல்லும் முதல்வருக்கு பிஎச்.டி., பட்டம் வழங்கலாம்; மதுரையில் தமிழிசை கிண்டல்

மதுரை : 'முதல்வர் ஸ்டாலின் செய்யும் தவறுகளை மறைக்க பொய் சொல்கிறார். இதில் அவருக்கு பிஎச்.டி., பட்டம் வழங்கலாம்' என பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை தெரிவித்தார்.மதுரையில் நேற்று அவர் கூறியதாவது: தமிழை பா.ஜ., வளர்த்துக் கொண்டிருக்கிறது. தமிழை போற்றுகிறது. புதிய கல்விக் கொள்கையில் பிரதான மொழி தமிழ். ஆனால் தமிழ் ஒழிக்கப்படும் என்ற தோற்றத்தை தமிழகத்தில் உருவாக்குகின்றனர். பலமுறை ஆட்சி செய்தும் அடிப்படை கல்வியை தமிழில் தி.மு.க., கொண்டுவரவில்லை. தமிழ் தெரியாமலேயே ஒருவர் பட்டப்படிப்பை நிறைவு செய்யும் நிலை உள்ளது. பிற மாநிலங்களில் அவரவர் மொழியில் மருத்துவம், பொறியியல் கற்பிக்கப்படுகிறது. அதுபோல் தமிழில் மருத்துவம், பொறியியல் படிப்புகளை கொண்டுவரலாமே என அமித்ஷா தெரிவித்துள்ளார்.

ஆங்கிலத்தை வளர்க்கிறார்

மத்திய அரசின் திட்டங்கள் ஹிந்தியில் உள்ளதாகவும், மூச்சுமுட்டுவதாகவும் முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். நீங்கள் மத்தியில் ஆட்சியில் அங்கம் வகித்தபோது அந்நிலையை மாற்றியிருக்கலாமே. பிஎச்.டி.,முதல்வர் தமிழை வளர்க்காமல் ஆங்கிலத்தை வளர்க்கிறார். நாங்கள் ஹிந்தியை திணிக்கவில்லை. கூடுதலாக மற்றொரு மொழியை கற்றுக் கொள்ளுமாறு கூறுகிறோம். லோக்சபா தொகுதி மறுவரையில் தமிழகம் பாதிக்கப்படாது என கூறிவிட்டோம். முதல்வர், செய்யும் தவறுகளை மறைக்க பொய் சொல்கிறார். இதில் அவருக்கு பிஎச்.டி.,பட்டம் வழங்கலாம். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. அப்புறப்படுத்தப்பட வேண்டியது தி.மு.க., ஆட்சி என த.வெ.க., தலைவர் விஜய் கூறுகிறார். அவரை பாராட்டுகிறேன். அதுதான் எங்கள் குறிக்கோள். மகளிர் தினத்தை உண்மையாக கொண்டாடும் வகையில் 2026 சட்டசபை தேர்தலில் திராவிட மாடல் ஆட்சி அப்புறப்படுத்தப்பட வேண்டும். பா.ஜ.,கூட்டணி குறித்து 6 மாதங்களுக்கு பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்ப வேண்டாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை