உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கோயில் உற்ஸவ விழா

கோயில் உற்ஸவ விழா

அலங்காநல்லுார்: தாதகவுண்டன்பட்டி அருகே நடுப்பட்டியில் மார்நாடு கருப்பசாமி பங்காளிகள் கோயில் உற்ஸவ விழா 3 நாட்கள் நடந்தது.முதல் நாள் சிறப்பு வழிபாடுகள் அன்னதானம் நடந்தன. சுவாமிகளை அழைத்து கோயில் வீட்டில் இருந்து பெட்டி எடுத்து பெரியாறு ஆற்றுக்கு சென்று நீராடினர். பின் மேளதாளம் முழங்க, வாண வேடிக்கையுடன் சுவாமிகளை கோயில் அழைத்து சென்றனர். திருவிளக்கு பூஜை நடந்தது. கோயில் முன் கிடாவெட்டி, பொங்கல் வைத்தனர். ஏற்பாடுகளை தாதகவுண்டன்பட்டி, நடுப்பட்டி கிராம மார்நாடு கோயில் பங்காளிகள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை