குன்றத்திற்கு தேவை ரோப் கார் ஆலயப் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தல்
மதுரை : ஆலயப் பாதுகாப்பு இயக்க மதுரை நகர் தலைவர் முருகன், துணைத் தலைவர் சரவணன், பொதுச் செயலாளர் ஆனந்த், செயலாளர் ராஜபாண்டி ஆகியோர் கலெக்டர் சங்கீதாவிடம் அளித்த மனு:திருப்பரங்குன்றத்திற்கு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. இக்கோயிலில் ரோப் கார் வசதியை ஆறுமாத காலத்தில் ஏற்படுத்த வேண்டும். திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய முன்னேற்பாடு செய்ய வேண்டும்.இப்பகுதியில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முயன்றவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாவட்ட நிர்வாகத்தின் அனைத்து தரப்பு கூட்டத்திற்கு, ஹிந்து அமைப்புகளுக்கோ, கட்சிகளுக்கோ அழைப்பு விடுக்காததை கண்டிக்கிறோம். வரும்காலத்தில் அனைவரையும் அழைக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.