உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பாழடைந்து வரும் பசுமலை மயானம்

பாழடைந்து வரும் பசுமலை மயானம்

திருப்பரங்குன்றம்: மதுரை பசுமலை மயானத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால் இறுதிச் சடங்குகள் செய்வோர் அவதிப்படுகின்றனர். பாழடைந்து வரும் இம்மயானத்தை சீரமைப்பது அவசியம்.இங்குள்ள மூன்று தகன மேடைகளில் ஒன்று இடிந்து விழுந்து விட்டது. மற்றொன்று பயன்படுத்த முடியாதவாறு ஆபத்தான நிலையில் உள்ளது. கழிப்பறை கட்டடமும் பயன்பாடின்றி ஆபத்தான நிலையில் உள்ளது. இறந்தவர்களை அடக்கம் செய்யும் பகுதி முழுவதும் செடி, கொடிகள் அடர்ந்து, வளர்ந்து காடுகள் போல காட்சியளிக்கிறது. இறுதிச் சடங்கிற்கு வருவோர் அமர்ந்திருக்கும் கட்டடமும் அபாயத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. நுழைவுப் பகுதி இரும்பு கதவுகள் பழுதடைந்து கிடக்கின்றன. அதனால் மயானம் எப்போதும் திறந்தே கிடக்கிறது.இறுதிச் சடங்கு, தகன நிகழ்வுகள் இல்லாத நேரங்களில் இந்த மயான வளாகம் தற்காலிக 'பார்' ஆக மாறிவிடுகிறது. பல ஆண்டுகளாக சீரமைப்பு காணாத பசுமலை மயானத்தை சீரமைக்க உடனடி நடவடிக்கை அவசியம் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை