மேலும் செய்திகள்
குன்றத்தில் கப்பரை பூஜை
26-Feb-2025
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் உப கோயிலான அங்காள பரமேஸ்வரி குருநாத சுவாமி கோயிலில் மாசி உற்ஸவம் நிறைவடைந்தது.பிப். 17ல் துவங்கிய விழாவில் தினமும் மூலவர்கள் அங்காள பரமேஸ்வரி, குருநாத சுவாமி, 21 பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம், பூஜை நடந்தது. பிப் 24ல் கப்பரை பூஜை, பிப். 26ல் மகாசிவராத்திரி, மார்ச் 28ல் பாரிவேட்டை விழா நடந்தது. மார்ச் 1 அன்று உற்ஸவர் அங்காள பரமேஸ்வரி, சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டார். உச்ச நிகழ்ச்சியாக நேற்று குருநாத சுவாமி கோயிலில் மூலவர்களுக்கு அபிஷேகம், சிறப்பு பூஜை முடிந்து அலங்காரமானது.
26-Feb-2025