உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாணவரை அழைத்து சென்ற முன்னாள் ஆசிரியை கைது

மாணவரை அழைத்து சென்ற முன்னாள் ஆசிரியை கைது

காரியாபட்டி : விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் பெற்றோருக்கு தெரியாமல் மாணவரை அழைத்து சென்ற முன்னாள் ஆசிரியை பாத்திமா கனி 40, போக்சோவில் கைது செய்யப்பட்டார்.காரியாபட்டி சி.இ.ஓ.ஏ., மெட்ரிக் பள்ளியில் கணினி அறிவியல் ஆசிரியையாக மதுரை வில்லாபுரத்தை சேர்த்த பாத்திமா கனி பணிபுரிந்தார். அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அப்பள்ளியில் படித்த பிளஸ் டூ மாணவர் ஒருவரிடம் அதிக அக்கறை செலுத்தினார். அந்த மாணவருக்கு விபத்து நடக்கவே அவரிடம் மிகுந்த இரக்கம் காட்டியதுடன் வீட்டுப்பாடங்களையும் செய்து கொடுத்தார். இதனால் பள்ளி நிர்வாகம் அவரை மேலூர் பள்ளிக்கு மாற்றம் செய்தது. அதற்கு பிறகும் மாணவருடன் ஆசிரியை தொடர்பில் இருந்துள்ளார். இதை அறிந்த பள்ளி நிர்வாகம் அவரை பணி நீக்கம் செய்தது.இந்நிலையில் மாணவரை ஜூன் 16ல் அதிகாலையில் இருந்து காணவில்லை. ஆவியூர் போலீசார் விசாரித்து புதுச்சேரியில் லாட்ஜ் ஒன்றில் தங்கியிருந்த மாணவரையும், முன்னாள் ஆசிரியையையும் பிடித்தனர். மாணவரை கல்லூரியில் சேர்க்கவே அழைத்து வந்ததாக ஆசிரியை தெரிவித்தார். இருப்பினும் பெற்றோருக்கு தெரியாமல் மாணவரை அழைத்து சென்றதால் போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியை கைது செய்யப்பட்டார். மாணவரை பெற்றோருடன் போலீசார் அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

David DS
ஜூன் 23, 2024 17:07

தற்கொலைப்படையில் சேர்க்க மூளைச்சலவைக்குக் கொண்டு செல்லப்பட்டவர் காப்பற்றப்பட்டார்


David DS
ஜூன் 23, 2024 17:07

தற்கொலைப்படையில் சேர்க்க மூளைச்சலவைக்குக் கொண்டு செல்லப்பட்டவர் காப்பற்றப்பட்டார்


தமிழ்வேள்
ஜூன் 23, 2024 11:00

அமைதி மார்க்கத்தில் கூட பாலின சமத்துவம் வந்து விட்டது.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை