உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பூட்டிய வீட்டில் நகைகள் திருட்டு

பூட்டிய வீட்டில் நகைகள் திருட்டு

பேரையூர்: பேரையூர் தாலுகா அயோத்திபட்டியைச் சேர்ந்தவர் பணராஜா. இவரது மனைவி சுதா 43. இவரும், மகளுடன் வீட்டை பூட்டி விட்டு அதே ஊரில் உள்ள விவசாயத் தோட்டத்திற்கு சென்றனர். வீடு திரும்பிய போது கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு 23 பவுன் நகைகள் மற்றும் ரூ.4 லட்சம் திருடு போயிருந்தது. இவர்கள் சேடப்பட்டி போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீசார் அருகில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது இரு மர்ம நபர்கள் டூவீலரில் ஹெல்மெட் அணிந்தபடி வந்து வீட்டை உடைத்து நகையை திருடி சென்றது தெரியவந்தது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை