உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / திரவுபதையம்மன் பூக்குழி திருவிழா

திரவுபதையம்மன் பூக்குழி திருவிழா

மேலுார் : மேலுார் திரவுபதையம்மன் வைகாசி மாத திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.மே 24 ல் காலை பால்குடம், மாலை திருக்கல்யாணம், மே 29 பீமன் கீசகன் வேடம், ஜூன் 4 சக்கரவியூக கோட்டை நிகழ்ச்சிகள் நடந்தன. ஜூன் 7 ல் அர்ச்சுனன் தவசு, ஜூன் 9 கூந்தல் விரிப்பு, ஜூன் 10 கூந்தல் முடிப்பு நிகழ்ச்சி நடந்தது.நேற்று காலை கோயிலில் இருந்து மருளாடிகள் பூக்குழி இறங்கும் இடத்தில் பூ (நெருப்பு) வளர்ப்பதற்கு கையில் நெருப்பு துண்டை ஊர்வலமாக கொண்டு சென்று பூ வளர்த்தனர். அதனை தொடர்ந்து பக்தர்கள் பூக்குழி இறங்கினர். பிறகு திரவுபதையம்மன் சிம்ம வாகனத்தில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று (ஜூன் 12) மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவு பெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை