உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போக்குவரத்து விழிப்புணர்வு

போக்குவரத்து விழிப்புணர்வு

மதுரை : மதுரையில் அரசு போக்குவரத்துக் கழகம், போக்குவரத்து போலீசார் இணைந்து ஓட்டுனர், நடத்துனர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பாதுகாப்பாக வாகனங்களை ஓட்டுவது, சாலை விதிகளை பின்பற்றுவது, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது, நகருக்குள் வேகத்தை குறைத்து இயக்குவது என அறிவுரை வழங்கினர். பொதுமேலாளர் மணி, போலீஸ் உதவி கமிஷனர் இளம்மாறன், எஸ்.ஐ., சந்தானகுமார், உதவிமேலாளர் மாரிமுத்து, கிளை மேலாளர் அசோக்குமார், சத்யமூர்த்தி, விபத்து தடுப்புப் பிரிவு அலுவலர் விஜயகுமார் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ