உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / லாரி - கார் மோதல்; வியாபாரிகள் காயம்

லாரி - கார் மோதல்; வியாபாரிகள் காயம்

மேலுார் : திருச்சி குளித்தலை மீன் வியாபாரிகள் ஆனந்த் 33, மகாமுனி 28. இருவரும் வியாபாரம் தொடர்பாக துாத்துக்குடி சென்றுவிட்டு காரில் திரும்பினர். ஆனந்த் ஓட்டினார். நேற்று காலை 9:00 மணியளவில் மேலுார் சத்தியபுரம் நான்கு வழிச்சாலையில் கார் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி எதிர்திசையில் வந்து கொண்டிருந்த சென்னை - - விருதுநகர் நல்லெண்ணைய் லாரி மீது மோதியது. இருவரும் காயமுற்றனர். எஸ்.ஐ., முத்துக்குமார், போலீஸ்காரர் தினேஷ்குமார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ