உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நைஜீரியாவில் லாரிகள் மோதல்: 48 பேர் பலி

நைஜீரியாவில் லாரிகள் மோதல்: 48 பேர் பலி

அபுஜா : நைஜீரியாவில் எரிபொருள் ஏற்றிச் சென்ற லாரியுடன், மற்றொரு லாரி மோதியதில் 48 பேர் உயிரிழந்தனர்.மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் நைஜர் மாகாணத்தில் உள்ள அகேய் நெடுஞ்சாலையில் எரிபொருள் ஏற்றிய லாரி ஒன்று சென்றது. அப்போது, அந்த வழியாக வந்த மற்றொரு லாரி மீது எரிபொருள் லாரி மோதியது.அந்த லாரியில் பயணியர் மற்றும் ஏராளமான கால்நடைகள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் இரு லாரிகளும் தீப்பிடித்து எரிந்தன.இந்த கோர விபத்தில், 48 பேர் பலியானதாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், 50க்கும் மேற்பட்ட கால்நடைகள் தீயில் கருகின. மேலும் சில வாகனங்கள் சிக்கியதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !