உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பேரையூரில் பயனில்லாத மண்புழு உரக்கூடங்கள்

பேரையூரில் பயனில்லாத மண்புழு உரக்கூடங்கள்

பேரையூர்: பேரையூர் தாலுகாவில் பல ஊராட்சிகளில் மண்புழு உரக்கூடங்கள் பயனற்றவையாக மாறி அரசு நிதி வீணாகி வருகிறது.பேரையூர் தாலுகாவில் சேடப்பட்டி, டி. கல்லுப்பட்டி ஒன்றியத்தில் 73 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சிகளில் மண்புழு உரக்கூடம் அமைக்கப்பட்டது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும், குப்பை மக்காத குப்பையைத் தரம் பிரித்து மக்கும் குப்பையில் இருந்து மண்புழு இயற்கை உரம் தயாரிக்க திட்டமிடப்பட்டது. இதற்காக ரூ.ஒரு லட்சம் மதிப்பீட்டில் கொட்டகை, மண்புழு வளர்க்க தொட்டிகள் அமைக்கப்பட்டன. ஆனால் பெரும்பாலான ஊராட்சிகளில் மண்புழு உரக்கூடம் பயன்பாட்டிற்கு வராமலேயே சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அரசின் நிதி வீணாவதோடு மண்புழு உரக்கூடம் அமைக்கும் நோக்கமும் வீணாகி உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். மண்புழு உரக் கூடங்களை முறையாக பயன்பாட்டிற்கு கொண்டு வர யூனியன் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ