வந்தே பாரத் ரயில் கட்டணம் அறிவிப்பு
மதுரை : மதுரை -- பெங்களூரு, சென்னை -- நாகர்கோவில் வந்தேபாரத் ரயில்கள் செப். 2 முதல் இயக்கப்படவுள்ளன. இந்த ரயில்களுக்கான கட்டண விபரம் வெளியிடப்பட்டுள்ளது.மதுரை -- பெங்களூர் ரயிலில் மதுரையிலிருந்து திண்டுக்கல்லுக்கு ரூ. 440, திருச்சிக்கு ரூ. 555, கரூருக்கு ரூ. 795, நாமக்கல்லிற்கு ரூ. 845, சேலத்திற்கு ரூ. 935, கிருஷ்ணராஜபுரத்திற்கு ரூ. 1555, பெங்களூரு கண்டோன்மெண்ட்டிற்கு ரூ. 1575 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதே ரயிலில் உயர்வகுப்பு (எக்ஸ்கியூட்டிவ் கோச்- இ.சி.,) மதுரையிலிருந்து திண்டுக்கல்லுக்கு ரூ. 825, திருச்சிக்கு ரூ. 1075, கரூருக்கு ரூ. 1480, நாமக்கல்லிற்கு ரூ. 1575, சேலத்திற்கு ரூ. 1760, கிருஷ்ணராஜபுரத்திற்கு ரூ. 2835, பெங்களூரு கண்டோன்மெண்ட்டிற்கு ரூ. 2865 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில்
சென்னை -- நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலில் சாதாரண இருக்கைகள் பெட்டியில்(சி.சி.,) சென்னையிலிருந்து தாம்பரத்திற்கு ரூ. 380, விழுப்புரத்திற்கு ரூ. 545, திருச்சிக்கு ரூ. 955, திண்டுக்கல்லுக்கு ரூ. 1105, மதுரைக்கு ரூ. 1200, கோவில்பட்டிக்கு ரூ. 1350, திருநெல்வேலிக்கு ரூ. 1665, நாகர்கோவிலுக்கு ரூ. 1760 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உயர் வகுப்பு இருக்கைகளுக்கு சென்னையிலிருந்து தாம்பரத்திற்கு ரூ. 705, விழுப்புரத்திற்கு ரூ. 1055, திருச்சிக்கு ரூ. 1790, திண்டுக்கல்லுக்கு ரூ. 2110, மதுரைக்கு ரூ. 2295, கோவில்பட்டிக்கு ரூ. 2620, திருநெல்வேலிக்கு ரூ. 3055, நாகர்கோவிலுக்கு ரூ. 3240 கட்டணமாக நிற்ணயிக்கப்பட்டுள்ளது. உணவுக்கான கட்டணமும் சேர்த்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.