உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கிராம மக்கள் திடீர் மறியல்

கிராம மக்கள் திடீர் மறியல்

திருமங்கலம், ஜூன் 20- திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் காண்டை கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கிருந்து திருமங்கலம், உசிலம்பட்டி பகுதிகளுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளுக்காக தினசரி நூற்றுக்கணக்கானோர் சென்று வருகின்றனர். இந்த கிராமத்திற்கு வரவேண்டிய பஸ் குறிப்பிட்ட நேரத்தில் வருவது இல்லை. மிகவும் தாமதமாக வருவதோடு சில நாட்கள் ‛ட்ரிப்’ கட் செய்யப்படுவதால் வருவதே இல்லை. இதனால் மாணவர்கள், தொழிலாளர்கள் சிரமப்படுகின்றனர். உரிய நேரத்தில் பஸ் வராததால் கிராமத்தில் இருந்து 3 கி.மீ., நடந்து சென்று பஸ் ஏறும் அவல நிலையும் இருந்து வந்தது. இதனால் நேற்று காலை தாமதமாக வந்த பஸ்சை கிராம மக்கள், பள்ளி மாணவர்கள் மறியல் செய்து, சிறை பிடித்தனர். அவர்களிடம் சிந்துபட்டி போலீசார் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இனி தாமதமின்றி உரிய நேரத்தில் பஸ்கள் வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததால் மறியல் கைவிடப்பட்டது. மறியலால் அந்தப் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை