மேலும் செய்திகள்
சென்னிமலை முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
18-Sep-2024
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பொது தரிசன பக்தர்கள் 3 மணி நேரமும் காத்திருந்து தரிசனம் செய்தனர்.நேற்று புரட்டாசி மாத பிறப்பு, பவுர்ணமி, செவ்வாய்க்கிழமை, விடுமுறை தினமானதால் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர். வழக்கமாக மதியம் ஒரு மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். நேற்று மதியம் 1:30 மணி வரை பக்தர்கள் வந்தனர். மதியம் 1:30 மணிக்கு கோயில் பெரிய நிலைக்கதவு சாத்தப்பட்டது. மூலஸ்தானத்தில் பக்தர்கள் மதியம் 2:30 மணிவரை தரிசனம் செய்து திரும்பினர். அதன்பின் மூலஸ்தான கதவுகள் சாத்தப்பட்டன.நேற்று கோயிலுக்கு வந்த அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா, கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் மூலஸ்தானத்தில் சிறப்பு தரிசனத்திற்கு இரண்டு வரிசைகளிலும், பொது தரிசனத்திற்கு இரண்டு வரிசைகளிலும் பக்தர்கள் செல்லவும், வி.ஐ.பி., க்கள் தரிசனத்தை தடை செய்யவும் உத்தரவிட்டார். கூடுதலாக குடிநீர் வசதி ஏற்படுத்தவும், கோவர்த்தனாம்பிகை அம்பாள் மண்டபத்தில் பக்தர்களுக்கு ஏசி அமைக்கவும் உள்துறை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.
18-Sep-2024