உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மகளிர் தின கருத்தரங்கு 

மகளிர் தின கருத்தரங்கு 

மதுரை: மதுரை காந்தி மியூசியத்தில் காந்தியக் கல்வி ஆராய்ச்சி நிறுவன யோகா மாணவர்கள் சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கருத்தரங்கு நடந்தது. இளநிலை உதவியாளர் நித்யா பாய் தலைமை வகித்தார். மாணவி கிருத்திகா வரவேற்றார். 'இந்திய போராட்டத்தில் பெண்கள்' தலைப்பில் மாணவிகள் ஸ்ரீதேவி, சித்ராதேவி பேசினர். சிறப்பு விருந்தினராக ஆதி பூர்ணா எக்ஜிம் நிறுவன சத்தியசாரா பங்கேற்று இன்றைய 'பெண்கள் எதிர்கொள்ளும் சாவல்கள்' தலைப்பில் பேசினார். 2 ஆண்டுகளாக அரசு மருத்துவமனை குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்கிய விஜயலட்சுமிக்கு மரியாதை செலுத்தப்பட்டது. மாணவர் பிரபு 'பெண் எனும் பேராற்றல்' என்ற தலைப்பில் கவிதை வாசித்தார். மாணவி முத்துசோலை நன்றி கூறினார். ஆராய்ச்சி நிறுவன முதல்வர் தேவதாஸ், மியூசிய செயலாளர் நந்தாராவ், யோகா ஆசிரியை நந்தினி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை