உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கண்மாய் சீரமைப்பிற்கு ரூ.10 லட்சம்

கண்மாய் சீரமைப்பிற்கு ரூ.10 லட்சம்

திருப்பரங்குன்றம்: மதுரை ஹார்விபட்டி சூறாவளி மேடு கண்மாய் சீரமைப்பிற்கு மாணிக்கம் தாகூர் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார்.நிலையூர் கால்வாய் மூலம் வைகை அணை தண்ணீரால் சூறாவளி மேடு கண்மாய் நிரம்பும். இக்கண்மாய் 70 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிப்பின்றி காடு போல் கருவேல் மரங்கள், செடி, கொடிகள் வளர்ந்து கிடந்தன. 10 ஆண்டுகளுக்கு முன்பு சீரமைக்க ஹைடெக் நிறுவனம் சார்பில் ரூ. 26 லட்சம் வழங்கப்பட்டது. தானம் அறக்கட்டளையுடன் இணைந்து ஹார்விபட்டி வயலகம் குழுவினர் சீரமைத்து தண்ணீர் தேக்கினர். கரையின் ஒரு பகுதியில் சிறுவர்கள் விளையாட்டு பூங்கா அமைத்தனர். தற்போது கண்மாய் கரைகளை பலப்படுத்தவும், விளையாட்டு சாதனங்கள், கரைகளில் விளக்குகள் பொருத்தவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை