உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சாலை விபத்துகளில் உயிரிழப்பு 15% குறைவு

சாலை விபத்துகளில் உயிரிழப்பு 15% குறைவு

சென்னை: டி.ஜி.பி., சங்கர் ஜிவால் அறிக்கை:கடந்தாண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் நடந்த சாலை விபத்தில், 4864 பேர் உயிரிழந்தனர். இந்த ஆண்டில் அதே காலகட்டத்தில், 4136 பேர் உயிரிழந்துள்ளனர். ஒப்பிட்டு பார்க்கும் போது, சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள், 15 சதவீதம் குறைந்துள்ளன.போக்குவரத்து விதிமீறல் தொடர்பான சட்டங்களை அமல்படுத்தியதன் வாயிலாக, 27,000க்கும் மேற்பட்ட ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நெடுஞ்சாலை ரோந்து வாகனம் வாயிலாக, விபத்தில் சிக்கிய 6296 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை