மதுரை காவலர் தேர்வில் 16 ஆயிரம் பேர் பங்கேற்பு
மதுரை: தமிழக போலீஸ் துறை சார்பில் நேற்று நடந்த 3,655 இரண்டாம் நிலை காவலர் பணியிடங் களுக்கான எழுத்துத் தேர்வில் மதுரை மாவட்டத்தில் 16 ஆயிரம் பேர் பங்கேற்றனர். மதுரை நகரில் யாதவா கல்லுாரி, மன்னர் கல்லுாரி, செவன்த்டே, கீழவாசல் புனித மரியன்னை, ஓ.சி.பி.எம்., மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 9 தேர்வு மையங்களில் 5 ஆயிரத்து 698 பேர் எழுதினர்; 651 பேர் 'ஆப்சென்ட்' ஆகி இருந்தனர். முன்னதாக யாதவா கல்லுாரி, ஓ.சி.பி.எம். மேல்நிலைப் பள்ளியில் நடந்த தேர்வை போலீஸ் கமிஷனர் லோகநாதன் ஆய்வு செய்தார். புறநகரில் 12 மையங்கள் மதுரை மாவட்ட போலீஸ் சார்பில் புறநகர் பகுதியில் மேலுார், சமயநல்லுார், திருமங்கலம், ஊமச்சிக் குளம் பகுதிகளில் லதா மாதவன், மங்கையர்க்கரசி கல்லுாரி உள்ளிட்ட 12 தேர்வு மையங்களில் தேர்வு நடந்தது. இதில் 1460 பேர் ஆப்சென்ட் ஆகி இருந்தனர். 10 ஆயிரத்து 257 பேர் தேர்வு எழுதினர். தேர்வு மைய பாதுகாப்பு பணிகளை எஸ்.பி., அரவிந்த் ஆய்வு செய்தார். விடைத்தாள்கள் போலீஸ் வாகனங்களில் பாதுகாப்புடன் சென்னை அரசு சீருடை பணியாளர் மையத்திற்கு அனுப்பி வைக்கப் பட்டது.