2 கிலோ புகையிலை ரூ.17 லட்சம் பறிமுதல்
கள்ளிக்குடி: கள்ளிக்குடி அருகே வெள்ளாகுளத்தில் பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் சோதனைக்காக சென்ற போது கணக்கில் வராத ரூ. 17 லட்சம் பிடிபட்டது. ஒருவரை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.கள்ளிக்குடி கே. வெள்ளாகுளத்தில் பெட்டிக்கடை வைத்து இருப்பவர் தங்கமுத்து 44. கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பதாக வந்த தகவலை அடுத்து நேற்று கள்ளிக்குடி போலீசார் சோதனை நடத்தினர். 2 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தன. மேலும் கணக்கில் வராத ரூ. 17 லட்சம் இருந்தது. விசாரித்த போது தங்கமுத்து முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினார். அவரை கைது செய்த போலீசார் பணம், புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.