உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நுாலகத்திற்கு 4.19 லட்சம் வாசகர்கள் வருகை

நுாலகத்திற்கு 4.19 லட்சம் வாசகர்கள் வருகை

மதுரை: மதுரை புதுநத்தம் ரோட்டில் கடந்த ஜூலையில் திறந்த கருணாநிதி நுாற்றாண்டு நுாலகத்தை 4.20 லட்சம் வாசகர்கள் பயன்படுத்தியுள்ளனர்.தற்போது முழுமையாக செயல்படும் நுாலகத்தின் குழந்தைகள் பிரிவில் 30 ஆயிரம் புத்தகங்கள், தமிழ்ப் பிரிவில் 90 ஆயிரம், ஆங்கில பிரிவில் 80 ஆயிரம், போட்டித் தேர்வு பிரிவில் 30 ஆயிரம், ஆங்கில குறிப்புதவி நுால்கள் 1.28 லட்சம் நுால்கள் என மொத்தம் 3.62 லட்சம் புத்தகங்கள் உள்ளன.பிப்.6 ம்தேதி வரை 4 லட்சத்து 19 ஆயிரத்து 660 பேர் அதாவது, தினமும் சராசரியாக 2 ஆயிரத்து 98 பேர் நுாலகத்தை பயன்படுத்த துவங்கியுள்ளனர். இதில் 762 பள்ளிகளில் இருந்து 67 ஆயிரத்து 172 மாணவர்களும், 205 கல்லுாரிகளில் இருந்து 14 ஆயிரத்து 304 மாணவர்களும் பயன்படுத்தியுள்ளனர்.மதுரை பழங்காநத்தம் மாணவர் ஸ்ரீகாந்த் கூறுகையில், ''பார்வை குறைபாடுடைய நான் உயர்கல்வி முடித்து, அரசு போட்டித் தேர்வுக்கு படிக்கிறேன். போதுமான இடவசதி இல்லாத வீட்டில் அமர்ந்து படிக்க சிரமப்பட்டேன். இந்நுாலகத்தில் பிரெய்லி புத்தகங்கள், ஆடியோ போன்ற வசதி உள்ளதால் தினமும் வந்து படித்துச் செல்கிறேன்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ