மேலும் செய்திகள்
தீபாவளி பண்டிகைக்கு 40 சிறப்பு பஸ்கள் இயக்கம்
09-Oct-2025
மதுரை: தீபாவளிப் பண்டிகையையொட்டி மதுரை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 400க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. மேலாண் இயக்குனர் சரவணன் கூறியிருப்பதாவது: தீபாவளிக்கு முன் அக்.16 முதல் 19 வரை சென்னையில் இருந்து மதுரைக்கு 440 பஸ்களும், திருச்சிக்கு 135, திருப்பூர் 60, கோவை 100, திருநெல்வேலி 15, நாகர்கோவில் 10, திருச்செந்துார் 20 என மற்ற நகரங்களுக்கு 360 பஸ்களும் இயக்கப்பட உள்ளன. தீபாவளி முடிந்தபின் மதுரையில் இருந்து அக்.21 முதல் 23 வரை சென்னைக்கு 385 பஸ்களும், (அக்.26 அன்று 75 பஸ்கள்) திருச்சிக்கு 130, திருப்பூருக்கு 50, கோவை 130, திருநெல்வேலி 15, நாகர்கோவில் 10, திருச்செந்துாருக்கு 15 பஸ்களும் இயக்கப்பட உள்ளன. மேலும் கொடைக்கானல், கொல்லம், மூணாறு, சேலம், நெய்வேலி, விழுப்புரம், மன்னார்குடி, கடலுார், நாகூர் போன்ற பிறநகரங்களுக்கும் பயணிகள் சிரமமின்றி செல்ல விரைவு போக்குவரத்துக் கழகம் மூலம் செயல்படும்www.tnstc.inஅலைபேசி செயலியில் முன்பதிவு செய்தும் பயணிக்கலாம். இந்நாட்களில் போக்குவரத்தை கண்காணிக்க பல்வேறு இடங்களில் கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
09-Oct-2025