மேலும் செய்திகள்
236 சத்துணவு உதவியாளர் பணி விண்ணப்பிக்க அழைப்பு
11-Apr-2025
மதுரை: மதுரை மாவட்ட பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 448 சமையல் உதவியாளர் பணியிடங்களில் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளன.வட்டாரம் வாரியாக நியமிக்கப்பட உள்ள பணியிடங்களின் எண்ணிக்கை அந்தந்த வட்டார அலுவலகங்கள், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் இனச்சுழற்சி வாரியாக தகவல் பலகையில் ஒட்டப்படும். இப்பணியில் நியமனம் செய்யப்படுவோருக்கு தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்படும் பணியாளர்களுக்கு ஓராண்டு கால பணிக்குப் பின்பு சிறப்பு காலமுறை ஊதியத்தில் (ஊதிய நிலை 3000 - 9000) வழங்கப்படும்.21 முதல் 40 வயதுள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். வயது நிர்ணயம் அறிவிப்பு தேதியின் அடிப்படையில் கணக்கிடப்படும். நியமனம் கோரும் மையத்திற்கும், விண்ணப்பதாரரின் குடியிருப்புக்கும் 3 கி.மீ.,க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, சம்பந்தப்பட்ட ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்களில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். கடைசி நாள் ஏப்.29.விண்ணப்பத்துடன் எஸ்.எஸ்.எல்.சி., மதிப்பெண் சான்று, ரேஷன் கார்டு, இருப்பிடச்சான்று, ஆதார் அட்டை, ஜாதிச்சான்று போன்றவற்றின் நகல்கள் இணைக்கப்பட வேண்டும். விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் அதற்கான சான்றிதழ் நகலை இணைக்க வேண்டும். நேர்முகத் தேர்வுக்கு அசல் சான்றுடன் வரவேண்டும் என கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
11-Apr-2025