உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கொரோனா வார்டில் 50 படுக்கைகள்

கொரோனா வார்டில் 50 படுக்கைகள்

மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் 50 படுக்கைகளுடன் கூடிய கொரோனா வார்டு உருவாக்கப்பட்டுள்ளது.இம்மருத்துவமனையில் நேற்று 37 பேர் புறநோயாளிகள் பிரிவில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றனர். இதில் குழந்தைகள் உட்பட 33 பேர் பல்வேறு நோய்களுடன் அந்தந்த துறை வார்டுகளில் அனுமதிக்கப்பட்டனர்.டீன் அருள் சுந்தரேஷ்குமார் கூறியதாவது:இங்கு 50 படுக்கைகளுடன் கூடிய கொரோனா வார்டு தயாராக உள்ளது. மற்ற வார்டுகளில் நோயாளிகளை பார்வையாளர்கள் பார்ப்பதற்கு முகக்கவசத்துடன் அனுமதிக்கப்படுவர். கொரோனா வார்டில் மற்றவர்களுக்கு அனுமதியில்லை. சிகிச்சை அளிக்கும் டாக்டர், நர்ஸ், இதர பணியாளர்களுக்கான பி.பி.இ., பாதுகாப்பு கவச உடை, என் 95 முகக்கவசம், மருந்துகள், சானிட்டைஸர், கிளவுஸ் அனைத்தும் போதுமான அளவில் இருப்பில் உள்ளது. 50 படுக்கைகளுக்கும் ஆக்சிஜன் வசதி உள்ளது. இதுவரை யாரும் வார்டில் சேர்க்கப்படவில்லை.சர்க்கரை நோய், புற்றுநோய் உட்பட இணை நோயாளிகளுக்கு கொரோனா தொற்று வந்தால் கூடுதல் கவனம் தேவை. மற்றவர்கள் பயப்பட தேவையில்லை. காய்ச்சல் இருந்தால் உடனே டாக்டரிடம் சிகிச்சை பெற வேண்டும். வார்டில் எல்லா வசதிகளும் உள்ளதால் கொரோனா நோயாளிகள் வந்தாலும் கவனித்துக் கொள்வோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ