உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஜல்லிக்கட்டில் 5347 வீரர்கள், 12,632 காளைகள்

ஜல்லிக்கட்டில் 5347 வீரர்கள், 12,632 காளைகள்

மதுரை : மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க 5347 மாடுபிடி வீரர்கள் ஆன்லைன் மூலம் பதிந்துள்ளனர். அவனியாபுரத்தில் ஜன. 14, பாலமேட்டில் ஜன.15, அலங்காநல்லுாரில் ஜன.16ல் ஜல்லிக்கட்டு நடக்கிறது. இதில் கலந்து கொள்ள விரும்பும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான பதிவு madurai.nic.inஇணையதளம் மூலம் நேற்று முன்தினம் (ஜன.6) மாலை 5:00 மணிக்கு தொடங்கி நேற்று (ஜன.7) மாலை 5:00 மணி வரை பதிவு நடந்தது. மூன்று இடங்களிலும் பங்கேற்பதற்காக 12 ஆயிரத்து 632 காளைகளை அதன் உரிமையாளர்கள் பதிவு செய்துள்ளனர். மொத்தம் 5347 மாடுபிடி வீரர்கள் ஆன்லைன் மூலம் தங்களது பெயர்களை பதிந்துள்ளனர். அலங்காநல்லுாரில் பங்கேற்க 5 ஆயிரத்து 786 காளை உரிமையாளர்களும் 1698 மாடுபிடி வீரர்களும் பதிந்துள்ளனர். பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 4820 காளை உரிமையாளர்களும் 1914 வீரர்களும் அவனியாபுரம் போட்டியில் பங்கேற்க 2026 காளை உரிமையாளர்களும் 1735 மாடுபிடி வீரர்களும் பதிந்துள்ளனர். காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு இ - மெயில் மூலமாகவும் குறுஞ்செய்தி மூலமாகவோ கியூ.ஆர்.கோடுடன் கூடிய ஆன்லைன் டோக்கன் அனுப்பப்படும். முறைகேட்டை தடுக்க கியூ.ஆர்.கோடுடன் கூடிய டோக்கன் பதிவிறக்கம் செய்த மாடுபிடிவீரர்கள் மற்றும் காளைகள் மட்டுமே ஜல்லிக்கட்டு விளையாட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ