உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / 615 கிலோ கஞ்சா அழிப்பு

615 கிலோ கஞ்சா அழிப்பு

மதுரை: மதுரை நகர போலீஸ் ஸ்டேஷன்களில் பதிவு செய்யப்பட்ட 126 கஞ்சா வழக்குகளில் 615.3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றை அழிக்க நகர போலீசார் முடிவு செய்தனர். போதைப் பொருள் ஒழிப்புக் குழுவின் தலைவர் லோகநாதன், உறுப்பினர்கள் துணை கமிஷனர் கராட்கருண் உத்தவ்ராவ், தடய அறிவியல் ஆய்வக உதவி இயக்குனர் வித்தியாராணி, காவல் கட்டுப்பாட்டு உதவி கமிஷனர் உதயகுமார், மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் சேதுமணிமாதவன் முன்னிலையில் கஞ்சா அழிக்கப்பட்டது. சட்டவிதிமுறைகளை பின்பற்றி, நெல்லை மாவட்டம் நான்குநேரி அசெப்டிக் சிஸ்டம் தொழிற்சாலையில் கஞ்சாவை போலீசார் அழித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை