மருத்துவக் கல்லுாரிக்கு 61வது உடல் தானம்
மதுரை : மதுரை அரசு மருத்துவக் கல்லுாரிக்கு கடந்த ஜூன் முதல் தற்போது வரை 61வது உடல் தானம் பெறப்பட்டதாக மதுரை அரசு மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலர் சரவணன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: கடந்த ஓராண்டில் 60 உடல்கள் மருத்துவக் கல்லுாரி மாணவர்கள் படிப்பிற்காக தானமாக பெறப்பட்டன. சம்மட்டிபுரம் ரத்தினம் 55, வீட்டில் இருந்த போது இடுப்பில் அடிபட்ட நிலையில் மதுரை அரசு மருத்துவமனை தீவிர விபத்து பிரிவில் செப். 22 ல் அனுமதிக்கப்பட்டார். செப். 28 ல் இறந்தார். இவருக்கு திருமணம் ஆகாததால் சகோதரர் பாலசுப்ரமணியன் இறந்த ரத்தினத்தின் உடலை மருத்துவக் கல்லுாரிக்கு தானமாக வழங்கினார். சகோதரரிடம் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது என்றார்.