குரூப் 2 தேர்வில் 6924 பேர் ‛ஆப்சென்ட்
மதுரை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) சார்பில் குரூப் 2, 2ஏ தேர்வுகள் நேற்று நடந்தது. மதுரை மாவட்டத்தில் இத்தேர்வுக்கு 29 ஆயிரத்து 874 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்கள் தேர்வு எழுதுவதற்காக மதுரை கிழக்கு தாலுகாவில் 6 மையங்கள், வடக்கில் 35, தெற்கில் 22, மேற்கில் 8, மேலுார் 7, திருப்பரங்குன்றம் 15, உசிலம்பட்டி 11 என மொத்தம் 104 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. நேற்று காலை 9:30 மணிக்கு தேர்வு துவங்கியது. மையங்களில் கண்காணிப்பு கேமரா, போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இத்தேர்வை மொத்தம் 22 ஆயிரத்து 950 பேர் (77 சதவீதம்) எழுதினர். 6 ஆயிரத்து 924 பேர் (23 சதவீதம்) 'ஆப்சென்ட்' ஆகி இருந்தனர். தேர்வு மையங்களில் கலெக்டர் பிரவீன்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் அன்பழகன் பார்வையிட்டனர்.