மஞ்சுவிரட்டில் 8 பேர் காயம்
சோழவந்தான்: சோழவந்தான் பசும்பொன் நகரில் தி.மு.க., மற்றும் இளைஞரணி சார்பில் முதலாண்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது.நகரச் செயலாளர் சத்திய பிரகாஷ், பேரூராட்சி தலைவர்கள் ஜெயராமன், பால்பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் பசும்பொன்மாறன், பால ராஜேந்திரன், இளைஞரணி துணை அமைப்பாளர் வெற்றிச்செல்வன் துவக்கி வைத்தனர்.வடத்தில் பூட்டிய ஒரு காளைக்கு 20 நிமிடம், அதனை அடக்க 9 வீரர்கள் களம் இறங்கினர். காளை பிடிபட்டால் காளையர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. பங்கேற்ற 15 காளைகளுக்கு மரியாதை செய்யப்பட்டது. போட்டியின் போது 8 வீரர்கள் காயமடைந்தனர். குருவித்துறை சுபாஷ் 24, சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டார்.