பழனிசாமி கூட்டத்திற்கு வந்தவர் விபத்தில் பலி
காரியாபட்டி: காரியாபட்டியில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி பங்கேற்ற தேர்தல் பிரசார கூட்டம் நேற்றிரவு நடந்தது. இதற்கு தண்டியனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி 65, மகன் வீரபாண்டி 40, டூவீலரில் வந்தனர். அதனை மகன் ஓட்டினார். ஹெல்மெட் அணியவில்லை. மாந்தோப்பு விலக்கு அருகே வந்த போது, அருப்புக்கோட்டையில் இருந்து சென்னை சென்ற தனியார் ஆம்னி பஸ் டூவீலரில் மோதியதில் கருப்பசாமி சம்பவ இடத்திலே பலியானார். வீரபாண்டி பலத்த காயமடைந்து காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மல்லாங்கிணர் போலீசார் விசாரிக்கின்றனர்.