உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சந்துக்குள் ஒரு சாக்கடை

சந்துக்குள் ஒரு சாக்கடை

திருமங்கலம்: திருமங்கலம் ஒன்றியம் மறவன்குளத்தில் புதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் சாக்கடைக்குள் தெரு அமைந்து இருப்பதால் கொசு உற்பத்தி மையமாக சாக்கடை உள்ளது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் தொற்று பரவும் அபாயம் உள்ளது.மறவன்குளத்தில் மேல்நிலை தண்ணீர் தொட்டி உள்ளது. அதன் அருகே ஊருணி தெரு உள்ளது. இந்த தெருவில் குறைந்த எண்ணிக்கையிலான வீடுகளே உள்ளன. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்ல முறையான வடிகால் வசதி இல்லை. மேல்நிலை தொட்டியில் இருந்து வரும் கழிவு நீரும், இந்த தெருவில்தான் சென்று சேர்கிறது. இதனால் அந்த தெரு முழுவதும் சாக்கடை சூழ, பாசி படர்ந்து கொசு உற்பத்தி மையமாக உள்ளது. ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து கழிவுநீர் தேங்காமல் பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ