உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சதுரகிரியில் ஆடி அமாவாசை

சதுரகிரியில் ஆடி அமாவாசை

பேரையூர்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் ஆடி அமாவாசை திருவிழா நேற்று தொடங்கியது. பேரையூர் தாலுகா சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு, ஆடி அமாவாசையை முன்னிட்டு நேற்று சாப்டூர் வாழைத்தோப்பு வழியாக பல ஆயிரம் பக்தர்கள் சென்றனர். பிரதோஷத்தை முன்னிட்டு அதிகாலை முதல் வாழைத்தோப்பு வழியாக மலையேறிச் சென்றனர். மாலையில் பிரதோஷ வழிபாடு நடந்தது. வனத்துறை சார்பில் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இரவில் தங்க அனுமதி இல்லை. பிளாஸ்டிக் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்லக் கூடாது. ஓடைகளில் குளிக்கக் கூடாது. வனப்பகுதிக்குள் கால்நடைகளை கொண்டு செல்லவும், பலியிடவும் தடை செய்யப்பட்டுள்ளது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ