மேலும் செய்திகள்
ஐயப்பன் கோவிலில் அன்னதானம்
25-Nov-2024
சோழவந்தான்: சோழவந்தான் அருகே தென்கரை ஐயப்பன் கோயில் சார்பில் வைகை ஆற்றில் சுவாமிக்கு ஆராட்டு விழா நடந்தது. முன்னதாக காலை 7:00 மணிக்கு யாகசாலை பூஜைகள் துவங்கி 9:00 மணிக்கு கோயிலில் இருந்து செண்டை மேளம் முழங்க யானை வாகனத்தில், வைகையில் சுவாமி எழுந்தருளினார். சுவாமிக்கு சந்தனம், இளநீர், நெய் உள்ளிட்ட 21 வகை அபிஷேகம், தீபாராதனை நடந்தது. சுவாமி ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார். மீண்டும் யானை வாகனத்தில் சுவாமி ஊர்வலம் கோயில் வந்தடைந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பக்தர்கள் செய்திருந்தனர்.
25-Nov-2024