உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பால் பற்றாக்குறையால் திணறும் ஆவின்

பால் பற்றாக்குறையால் திணறும் ஆவின்

மதுரை: தமிழகத்தில் ஆவின் பால் கொள்முதல் நாள் ஒன்றுக்கு 34 லட்சம் லிட்டராக இருந்தது. வெயில் தாக்கத்தால் 27 லட்சம் லிட்டராக குறைந்தது. தமிழக அரசு பால் கொள்முதல் விலையை செப்.1ல் உயர்த்தியது. இதன் மூலம் பால் கொள்முதல் தற்போது மீண்டும் 31 லட்சம் லிட்டராக அதிகரித்துள்ளது. ஆனால் விற்பனை 32 லட்சம் லிட்டராக உள்ளது. பால் விலை உயர்வை ஜூனில் அறிவித்திருந்தால் கொள்முதல் இன்னும் அதிகரித்திருக்கும். நெய் உட்பட பால் பொருட்கள் தயாரிப்புக்கு தற்போது குறைந்தது 5 லட்சம் லிட்டர் தேவை. ஆனால் பற்றாக்குறையாக உள்ளதால் தீபாவளிக்கு பால் பொருட்கள் தயாரிப்பு கேள்விக்குறியாகியுள்ளது. ஆவின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த தீபாவளி விற்பனை ரூ.70 கோடி. நெய் மட்டும் ரூ.50 கோடிக்கு விற்றது. இந்தாண்டு விற்பனை இலக்கு ரூ.80 கோடி. தற்போது பால் பற்றாக்குறையால் இந்த இலக்கை எட்டுவது சிரமம். முன்னெச்சரிக்கையாக வெளி மாநிலங்களில் இருந்து பட்டர், பால் பவுடரை கொள்முதல் செய்ய துறை அமைச்சர், ஆவின் கமிஷனர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ