உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம்

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம்

மதுரை: மதுரை கலெக்டர் சங்கீதா தலைமையில், தொழிலாளர் இணை கமிஷனர் சுப்பிரமணியன் முன்னிலையில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்க இணை இயக்குநர் வேலுமணி, தொழிலாளர் உதவி கமிஷனர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பாரி, கொத்தடிமை தொழிலாளர் கண்காணிப்பு குழு உறுப்பினர் ஆகியோர் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்றனர்.கலெக்டர் அலுவலக வளாகதத்தில் கையெழுத்து இயக்க வாகனத்தை கலெக்டர் துவக்கி வைத்தார். அதில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு குறும்படம் ஒளிபரப்பப்பட்டது. இந்த வாகனம் மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும்.மாநகராட்சி வீதிகளில் டிஜிட்டல் சுவர், டிவியில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகை ஒளிபரப்பு செய்யப்பட்டது.கொத்தடிமை தொழிலாளர் யாராவது பணியில் அமர்த்தப்பட்டது தெரியவந்தால் நீதிமன்ற நடவடிக்கையுடன் 3 ஆண்டுகள் சிறை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கொத்தடிமை தொழிலாளர் ஒருங்கிணைப்பு அலுவலர் கார்த்திகேயன் தெரிவித்தார்.

மேயர் உறுதிமொழியேற்பு

மதுரை மாநகராட்சி திரு.வி.க., மேல்நிலை பள்ளியில் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் உறுதிமொழி ஏற்கப்பட்டது.மண்டல தலைவர் சரவணபுவனேஸ்வரி, கல்விக் குழு தலைவர் ரவிச்சந்திரன், பி.ஆர்.ஓ., மகேஸ்வரன், கவுன்சிலர் மகாலட்சுமி, தலைமையாசிரியர் மரியசெல்வநாதன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ