உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விபத்தில் மூளைச்சாவு உடல் உறுப்புகள் தானம்

விபத்தில் மூளைச்சாவு உடல் உறுப்புகள் தானம்

மதுரை: ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ். மங்கலம் செங்குமடையை சேர்ந்தவர் முருகன், 59. இவர், கடந்த 24ல் டூ - வீலரில் சென்றபோது, தவறி விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. அடுத்த நாள், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் மாலை மூளைச்சாவு அடைந்தார்.மனைவி கனகாம்பாள் ஒப்புதலுடன் முருகனின் உடல் உறுப்புகள் மதுரை வேலம்மாள் மருத்துவமனை, நெல்லை மற்றும் மதுரை அரசு மருத்துவமனையில் தானமாக பெறப்பட்டன. ராமநாதபுரத்தில் முருகன் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை