உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அபாகஸ் போட்டியில் சாதனை

அபாகஸ் போட்டியில் சாதனை

அலங்காநல்லுார், : மதுரை சிக்கந்தர்சாவடி துளிர் அகாடமி மாணவர்கள் 14 பேர் துபாயில் நடந்த சர்வதேச அபாகஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றனர்.இப்போட்டியில் 3 முதல் 14 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் உலக அளவில் 47 நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் துபாய் மற்றும் ஆன்லைன் வழியாக பங்கேற்றனர். இப்போட்டி மாணவர்களின் கணித திறமையை அதிகரித்தல், மூளை வளர்ச்சியை துாண்டுதல், தன்னம்பிக்கையோடு செயல்படுதல், கவனத்தோடும், சுறுசுறுப்போடும் வளரும் திறமையை ஊக்குவிக்கும் விதமாக போட்டிகள் நடத்தப்பட்டன. பயிற்சியாளர்கள் ஜெனிபர், முத்துக்குமார் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ