மேலும் செய்திகள்
தேசிய கராத்தேயில் வெற்றி
05-Dec-2024
அலங்காநல்லுார் : கர்நாடகாவில் தேசிய கராத்தே போட்டிகள் நடந்தன. இதில் அலங்காநல்லுார் கொன்சோ கராத்தே பயிற்சி பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். இமாகுலேட் பள்ளி அஷ்வந்த்ராஜ் கட்டா, ஜெய பிரதீப் சண்டை 9 வயதுப்பிரிவில் முதலிடம், சந்துரு 12 வயது சண்டையில் முதலிடம் பிடித்தனர்.அக்சீலியம் பள்ளி ரிஷிவத்14 வயது கட்டாவில் முதலிடம், அருண்பாண்டி 40 கிலோ சண்டையில் முதலிடம்,14 வயது கட்டாவில் முகமது அஷ்வத் முதலிடம், இ.பி.ஜி., பள்ளி பிரியன் 16 வயது கட்டாவில் 2ம் இடம், டீம் கட்டாவில் மகரிஷி பள்ளி மாணவர்கள் சுதர்சன், பிரமோத், முத்துராம், சிவராமன் 2ம் இடம் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்கள், பயிற்சியாளர்கள் பாலகுரு ஜெகதீசனை பள்ளி முதல்வர்கள் சுமித்தா, இருதய அரசி மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் பாராட்டினர்.
05-Dec-2024