சிலம்பத்தில் சாதனை
மதுரை: மதுரைக் கல்லுாரியில் அசார் சல்மான் சிலம்ப மையம் சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு உலக சிலம்ப சாதனை நிகழ்ச்சி நடந்தது. சிலம்ப மையத்தைச் சேர்ந்த 20 மாணவர்கள், 79 வகையான சிலம்ப சுற்றுமுறையை ஒன்றரை மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்தனர். பயிற்சியாளர் அசாருதீன் ஏற்பாடுகளைசெய்திருந்தார்.